ADDED : ஜூன் 26, 2025 11:45 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க ஒன்பதாவது மாநாடு, மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, மரக்கடை சந்து பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது. புதிய தலைவராக முருகேஷ், செயலாளராக பாலன், பொருளாளராக கோபால் பொறுப்பேற்றனர்.
தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தை அனைத்து கிராமம், நகரங்களிலும் நடைமுறைப்படுத்தி, சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கவேண்டும்; கந்துவட்டி கும்பலிடமிருந்து காப்பாற்றவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.