ADDED : ஜூலை 04, 2025 11:04 PM
பொங்கலுார்; கார்த்திகை பட்டத்தில் நடவு செய்த தக்காளி அறுவடை சீசன் முடிந்துள்ளது. மாசி பட்டத்தில் நடவு செய்த தக்காளி அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக காய்ப்புத்திறன் இழந்துவிட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சித்திரை, வைகாசி மாதங்களில்,14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 100 முதல், 150 ரூபாய்க்கு விலை போனது. தற்பொழுது ஒரு பெட்டி அதிகபட்சமாக, 550 ரூபாய்க்கு விலை போகிறது. கடைகளில் கிலோ, 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வைகாசி பட்டத்தில் நடவு செய்த தக்காளி தற் பொழுது பூக்க துவங்கியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் புது தக்காளி வரத்து அதிகரிக்கும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது.