/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவில் வளாகத்தில் ரூ.44 லட்சத்தில் கழிப்பறை கோவில் வளாகத்தில் ரூ.44 லட்சத்தில் கழிப்பறை
கோவில் வளாகத்தில் ரூ.44 லட்சத்தில் கழிப்பறை
கோவில் வளாகத்தில் ரூ.44 லட்சத்தில் கழிப்பறை
கோவில் வளாகத்தில் ரூ.44 லட்சத்தில் கழிப்பறை
ADDED : மார் 25, 2025 06:38 AM
அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில், புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
கோவில் குண்டம் தேர்த்திருவிழா வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. எட்டாம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குண்டம் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக நவீன கழிப்பறை மற்றும் குளியலறை கட்ட அறநிலையத்துறை சார்பில், 44 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்டப்பட்ட நவீன கழிப்பறை திறப்பு விழா நேற்று பக்தர்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தி.மு.க., திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ், மாநில பிரசார குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.