/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளிகளின் அருகில் புகையிலை இல்லாத பகுதி குறியீடு பள்ளிகளின் அருகில் புகையிலை இல்லாத பகுதி குறியீடு
பள்ளிகளின் அருகில் புகையிலை இல்லாத பகுதி குறியீடு
பள்ளிகளின் அருகில் புகையிலை இல்லாத பகுதி குறியீடு
பள்ளிகளின் அருகில் புகையிலை இல்லாத பகுதி குறியீடு
ADDED : ஜூன் 30, 2025 10:23 PM

உடுமலை; பள்ளிகளின் அருகில், புகையிலை இல்லாத பகுதியாக அடையாளப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய கல்வியாண்டு, 2025-26 க்கான வகுப்புகள் ஜூன் முதல் வாரம் முதல் துவக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான புத்துணர்ச்சி நிகழ்ச்சிகள், பல்வேறு தினங்களை அனுசரித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளிகளின் சுற்றுப்பகுதியில் புகையிலை இல்லாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பள்ளிகளை சுற்றி, 90 மீட்டர் வரை எந்த புகையிலை பொருட்கள் விற்பனையும் இருக்காத வகையில் பாதுகாப்பதற்கும், அதை அடையாளப்படுத்தும் வகையில் 'புகையிலை இல்லாத பகுதி' என குறியீடு போடுவதற்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் அரசு பள்ளிகளை சுற்றிலும் பள்ளி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தும், பொதுமக்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரோட்டில் புகையிலை இல்லாத பகுதியாக மஞ்சள் நிறத்தில் குறியீடு போட்டு வருகின்றனர்.