/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வனத்துறை ஊழியர்களுக்கு உதவிய 'வனத்துக்குள் திருப்பூர்' குழுவினர் வனத்துறை ஊழியர்களுக்கு உதவிய 'வனத்துக்குள் திருப்பூர்' குழுவினர்
வனத்துறை ஊழியர்களுக்கு உதவிய 'வனத்துக்குள் திருப்பூர்' குழுவினர்
வனத்துறை ஊழியர்களுக்கு உதவிய 'வனத்துக்குள் திருப்பூர்' குழுவினர்
வனத்துறை ஊழியர்களுக்கு உதவிய 'வனத்துக்குள் திருப்பூர்' குழுவினர்
ADDED : செப் 22, 2025 12:36 AM

திருப்பூர்; வனத்துறையின், 87 தற்காலிக ஊழியர்களுக்கான 'ரெயின் கோட்'மற்றும் பாதுகாப்பு ஷூக்களை, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு வழங்கியுள்ளது.
திருப்பூர் வெற்றி அறக்கட்டளை சார்பில், 'வனத் துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வனத்துறையுடன் இணைந்து, மரம் வளர்ப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கடந்த, 2015ம் ஆண்டு துவங்கி, இதுவரை, 24 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை வனச்சரக ஊழியர்களுக்கு தேவையான, 'ரெயின் கோட்' மற்றும் பாதுகாப்பு காலணிகள் வழங்கியுள்ளது.
தற்காலிக பணியாளர்கள், 87 பேருக்காக, இந்த உதவி செய்யப்பட்டுள்ளது. வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு சென்ற, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், அதிகாரிகள் சுரேஷ் கிருஷ்ணா, கிரிதரன் ஆகியோரிடம், இப்பொருட்களை நேற்று ஒப்படைத்துள்ளனர்.