/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரலாறு காணாத வளர்ச்சியை நோக்கி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பெருமிதம் வரலாறு காணாத வளர்ச்சியை நோக்கி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பெருமிதம்
வரலாறு காணாத வளர்ச்சியை நோக்கி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பெருமிதம்
வரலாறு காணாத வளர்ச்சியை நோக்கி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பெருமிதம்
வரலாறு காணாத வளர்ச்சியை நோக்கி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பெருமிதம்
ADDED : மே 10, 2025 02:41 AM

திருப்பூர் : திருப்பூர் வரலாறு காணாத அளவுக்கு வளர்ச்சி அடையும் என ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் வருமானவரித்துறை சார்பில், டி.டி.எஸ்., மற்றும் டி. சி .எஸ்., தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஏற்றுமதியாளர் சங்க இணைச்செயலாளர் குமார் வரவேற்று பேசியதாவது: வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் வரி கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில் வரிவிதிப்பில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. மாற்றத்திற்காக ஒவ்வொருவரும் தயாராகிக் கொள்ள வேண்டும். வருமான வரி செலுத்துவதில், திருப்பூர் முதன்மை நகரமாக உள்ளது. வரியை சரியான நேரத்தில் செலுத்துபவர்களே இதற்கு காரணம். திருப்பூர் மற்ற நகரங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
பிரிட்டன் உடனான வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்கா வர்த்தக ஒப் பந்தம் போன்றவற்றால், இனிவரும் நாட்களில் திருப்பூர் வரலாறு காணாத வளர்ச்சியை அடையும் இந்நிலையில் வரி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுச் செயலாளர் திருக் குமரன் பேசுகையில், ''டி.டி.எஸ்.,- டி.சி.எஸ். வரி கட்டமைப்பில், பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. அதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். வரி தாக்கல் செய்யும்பொழுது நிகழும் தவறுகளுக்கு அபராத கட்டணம் விதிக்கக்கூடும்; அதை தவிர்க்க, இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.
நிகழ்ச்சியில், வருமான வரி அதிகாரி அழகர்சாமி, ஆடிட்டர் அருண்குமார், டி.டி.எஸ்., பயிற்சியாளர் காளிதாஸ், பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வணிக மேம்பாடு பிராண்டிங் மற்றும் நிலத்தன்மை குழு தலைவர் ஆனந்த் உள்ளிட்ட ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.