/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பதி ரயிலில் கூடுதல் இருக்கை திருப்பூர் பக்தர்கள் மகிழ்ச்சி திருப்பதி ரயிலில் கூடுதல் இருக்கை திருப்பூர் பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி ரயிலில் கூடுதல் இருக்கை திருப்பூர் பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி ரயிலில் கூடுதல் இருக்கை திருப்பூர் பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி ரயிலில் கூடுதல் இருக்கை திருப்பூர் பக்தர்கள் மகிழ்ச்சி
ADDED : மார் 21, 2025 02:01 AM
திருப்பூர்: திருப்பூர் வழியாக பயணிக்கும் கோவை - திருப்பதி வாராந்திர ரயில் எல்.எச்.பி., பெட்டிக்கு மாற்றப்பட்டுள்ளதால், டிக்கெட் முன்பதிவு மற்றும் பொது பெட்டியில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது; இதனால், திருப்பதி செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்படும் போது அதிக சேதம் ஏற்படாமல் இருக்க, பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்க, நவீன வசதிகளுடன் கூடிய எல்.எச்.பி., பெட்டிகள், அதிகளவில் பயணிகள் பயணிக்கும் ரயில்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்படுகிறது. நேற்று கோவையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட ரயில் (எண்:22616) எல்.எச்.பி., பெட்டிகளுக்கு மாற்றப்பட்டது. ஒரு முன்பதிவு பெட்டியில், 101 - 104 ஆக உள்ள இருக்கை எண்ணிக்கை, எல்.எச்.பி., பெட்டி நிறுவப்பட்டதால், 106 - 108 ஆக அதிகரிக்கும்.
தற்போது இந்த ரயிலில், எட்டு முன்பதிவில்லா பொது பெட்டி, பத்து முன்பதிவு பெட்டி உட்பட, 19 பெட்டிகள் உள்ளது. பெட்டிகளில் வழக்கத்தை விட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பதால், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.