/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருக்குறள் ஓவியம்; மாணவர்கள் ஆச்சரியம் திருக்குறள் ஓவியம்; மாணவர்கள் ஆச்சரியம்
திருக்குறள் ஓவியம்; மாணவர்கள் ஆச்சரியம்
திருக்குறள் ஓவியம்; மாணவர்கள் ஆச்சரியம்
திருக்குறள் ஓவியம்; மாணவர்கள் ஆச்சரியம்
ADDED : மார் 21, 2025 02:01 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி செல்லப்பபுரம் நடுநிலைப்பள்ளியில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் ஓவியம் காட்சிப்படுத்துதல் நிகழ்வு நடந்தது.
திருப்பூர் மங்கை பாரதி பதிப்பகம் கந்தசாமி புத்தகம் - ஓவியங்களை பள்ளிக்கு வழங்க, தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி பெற்றுக்கொண்டார். நிகழ்வில் திருக்குறளின் பெருமை, சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தென்காசி, பாவூர்சத்திரம், அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நந்திதா வரைந்த திருக்குறள், திருவள்ளுவர் இணைந்த பென்சிலால் வரையப்பட்ட ஓவியம், காட்சிப்படுத்தப்பட்டது. ஓவியங்களை பார்த்த பள்ளி மாணவ, மாணவியர் உட்பட பலர் ஆச்சரியம் அடைந்தனர்.