/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கலை நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆலோசனை கலை நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆலோசனை
கலை நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆலோசனை
கலை நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆலோசனை
கலை நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆலோசனை
ADDED : மே 17, 2025 01:23 AM

திருப்பூர் : கலை நிகழ்ச்சிகள், மண்டப கட்டளை பூஜைகள், யாகசாலை பூஜையுடன், திருப்பூரில் தேர்த்திரு விழாவை விமரிசையாக கொண்டாடுவது என திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. அதற்கான ஆலோசனை கூட்டம், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வனராஜா, சம்பத்குமார் உள் ளிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் அமைப்பினர், சமுதாய அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரும் ஜூன் 2ல், செல்லாண்டியம்மன் அபிேஷகம், கிராமசாந்தி நிகழ்ச்சி; 3ம் தேதி கொடியேற்றம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, திருக்கல்யாண உற்சவம், 9 மற்றும் 10ம் தேதிகளில் தேரோட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.பல்வேறு சமுதாய மக்கள் மற்றும் அறக்கட்டளை சார்பில், வழக்கம் போல் மண்டப கட்டளை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
வழக்கம் போல், பெருமாள் கோவில் வளாகத்தில் மேடை அமைத்து, தினமும் மாலை, 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்படும். தேரோட்டத்தின் போது, பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், அன்னதானம் வழங்கப்படும்.
தேர்வீதிகள் துாய்மைப்படுத்தி, தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், கருட வாகனம், ஆதிேஷச வாகனம் மற்றும் கற்பக விருட்சம் ஆகிய, சுவாமி உற்சவ வாகனங்கள் மட் டும் உள்ளன. விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உற்சவமூர்த்திகள், தினமும் ஒவ்வொரு வாகனங்களில் திருவீதியுலா செல்வதுபோல், பெருமாள் கோவிலுக்கும், பக்தர்கள் பங்க ளிப்புடன் கூடுதல் உற்சவ வாகனங்கள் தயாரிக்கலாம் என்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.