Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'சங்க இலக்கியம் போன்ற சிறப்பு வேறு மொழியில் இல்லை'

'சங்க இலக்கியம் போன்ற சிறப்பு வேறு மொழியில் இல்லை'

'சங்க இலக்கியம் போன்ற சிறப்பு வேறு மொழியில் இல்லை'

'சங்க இலக்கியம் போன்ற சிறப்பு வேறு மொழியில் இல்லை'

ADDED : செப் 07, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
பல்லடம் : பல்லடம் வனம் அமைப்பின் வான்மழை கருத்தரங்கம், வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது.

சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகத்தின் இயக்குனர் சுந்தர் கணேசன் பேசியதாவது:

புத்தகங்களை ஏன் பாதுகாக்க வேண்டும். எப்படியெல்லாம் அதற்கான முன்னெடுப்புகள் நடந்துள்ளது; அதன் பின்புலம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பு அரசியல் காரணமாக, அறிவு சார்ந்த நுால்கள் தான் முதலில் அழிக்கப்படுகின்றன. நாம் இழந்த நுால்கள் மீண்டும் நமக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

அவற்றில் என்னவெல்லாம் தகவல்கள் இருந்தன என்பதும் நமக்குத் தெரியாது.

தமிழ் மொழியின், சங்க இலக்கியம் போன்ற ஒரு சிறப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை. கீழடி உள்ளிட்ட அகழ்வு ஆராய்ச்சிகள் மூலம், நமது தொன்மை இன்னும் பின்னோக்கிய காலத்துக்கு சென்று வருகிறது. சங்க இலக்கியங்கள் இருந்தது, 18ம் நுாற்றாண்டு வரை பலருக்கும் தெரியாது. இன்றும், பண்டைய முக்கியமான தரவுகள் பல இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஓலைச்சுவடிகளில் துவங்கி, புத்தகங்களாகி, கணினியில் பதிவேற்றப்பட்டு இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரே மொழி தமிழ் மட்டுமே. மேலும், இந்தியாவிலேயே முதன்முதலாக அச்சில் வெளிவந்த மொழி தமிழ். வள்ளலார், தாயுமானவர் உள்ளிட்ட பல ஆளுமைகள், தமிழ் மொழியை வளர்த்தெடுத்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, சித்த மருத்துவத்தின் மகத்துவம் குறித்து மருத்துவர் ஜெயகல்பனா பேசினார். நிகழ்ச்சிக்கு, வனம் அமைப்பின் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜ் வரவேற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us