/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா வரும் ஏப்., 9ம் தேதி துவங்குகிறதுஉடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா வரும் ஏப்., 9ம் தேதி துவங்குகிறது
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா வரும் ஏப்., 9ம் தேதி துவங்குகிறது
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா வரும் ஏப்., 9ம் தேதி துவங்குகிறது
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா வரும் ஏப்., 9ம் தேதி துவங்குகிறது
ADDED : பிப் 06, 2024 01:44 AM

உடுமலை;உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் ஏப்., 9ம் தேதி துவங்குகிறது; முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், ஏப்., 25ம் தேதி நடக்கிறது.
உடுமலையில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த, மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆண்டு திருவிழாவான, தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
நடப்பாண்டு தேர்த்திருவிழா, வரும் ஏப்., 9ம் தேதி, மாலை, அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
ஏப்., 16ல், கம்பம் போடுதல், 18ம் தேதி, கொடியேற்றம், பூவோடு ஆரம்பம், 24ம் தேதி, அதிகாலை, மாவிளக்கு, திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம், வரும், 25ம் தேதி நடக்கிறது. தினமும், அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வருதல், 26ம் தேதி, அம்மன் ஊஞ்சல் உற்சவம், பரிவேட்டை, வான வேடிக்கை என, ஏப்., 27 வரை தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், தினமும் ஆன்மிக நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தேர்த்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், நேற்று நடந்தது. பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா மற்றும் மண்டகப்படிதாரர்கள், உபயதாரர்கள், சமூகத்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.