/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்' 'தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்'
'தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்'
'தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்'
'தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும்'
ADDED : செப் 02, 2025 11:17 PM
திருப்பூர்; அமெரிக்காவின், அதிகபட்ச வரிவிதிப்பால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் இருந்து, தொழில் வாய்ப்புகளை தக்க வைக்கவும், தொழிலாளர் வேலையிழப்பை தடுக்கவும், மத்திய அரசின் உதவி அவசியம் என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து 'டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ''அசாதாரண சூழல் நிலவுவதால், தமிழக அரசும் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, மின் கட்டணத்தில் இருந்து, சில மாதம் விலக்கு அளிக்க வேண்டும்; நிலை கட்டண உயர்வை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சொத்துவரி, தொழில்வரி தள்ளுபடி வாயிலாகவும் உதவி செய்ய முன்வர வேண்டும்,'' என்றார்.