ADDED : ஜன 08, 2024 01:34 AM
உழைப்பின் அருமை
பொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு தித்திப்பாய் இனிக்கும். கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும். இதனால்தான் மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்.
இனிக்குமா வியாபாரம்?
கரும்பு வியாபாரிகள் கூறியதாவது:
அரசின் இலவச பரிசுத்தொகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு சேர்க்கப்படுகிறது. கிராமங்களில் நிச்சயம் பொங்கல் வைப்பர். தோட்டங்களில் மாட்டுப்பொங்கலும் உண்டு என்பதால் கரும்பு கட்டாயம் விற்பனையாகும். ஆனால், நகரங்களில் குறைந்த எண்ணிக்கையே தான். ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே கரும்பு சந்தைக்கு வந்த போது அல்லது தேர்த்திருவிழா கரும்பு விற்பனைக்கு வந்த போது அதிசயமாக இருந்தது. தற்போது, ஆண்டு முழுதும் கரும்பு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, ஆயுதபூஜைக்கு நிறுவனங்களில் கட்டாயம் பூஜை நடக்கும் என்பதால், அதிகமாக கரும்பு கொண்டு வரப்படுகிறது. அந்தளவு கூட பொங்கலுக்கு திருப்பூருக்கு கரும்பு வருவதில்லை.
பனி குறைந்தால்...
மார்கழி பிறப்பு முதல் மல்லிகை பூ வரத்து குறைந்து, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு மாதமாகியும் மல்லிகை பூ, கிலோ ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக விற்பதால், பூ விற்பனை லாபம், வெகுவாக குறைந்துள்ளது. பொங்கலுக்கு முன்பாக பனி குறைந்து, செடிகளில் பூக்கள் பூப்பது அதிகமாகி, வரத்தும் அதிகரித்தால் தான், விலை குறையும், பூ விற்பனை செழிக்கும். அதனை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்கின்றனர், பூ வியாபாரிகள்.
---
தலைப்புகள்
-------
அறத்... தை
ஈகைத்... தை
ஆக்கத்... தை
ஈனும்... தை