/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மக்காச்சோளம் அறுவடை துவக்கம்: சாகுபடி குறைந்தும் விலை உயரலமக்காச்சோளம் அறுவடை துவக்கம்: சாகுபடி குறைந்தும் விலை உயரல
மக்காச்சோளம் அறுவடை துவக்கம்: சாகுபடி குறைந்தும் விலை உயரல
மக்காச்சோளம் அறுவடை துவக்கம்: சாகுபடி குறைந்தும் விலை உயரல
மக்காச்சோளம் அறுவடை துவக்கம்: சாகுபடி குறைந்தும் விலை உயரல
ADDED : ஜன 28, 2024 08:49 PM

உடுமலை;உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விலை உயராததால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கு பிரதானமாக மக்காச்சோளம் உள்ளதால், அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால், உடுமலை பகுதிகளில், வழக்கமாக, டிச., மாதம் துவங்கி, மார்ச் வரை அறுவடை நடக்கும்.
கடந்தாண்டு, மழைப்பொழிவு குறைவு, பி.ஏ.பி., தண்ணீர் திறப்பு காலம் குறைப்பு, படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.
இப்பகுதிகளில், தற்போது, ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது. தற்போது, குவிண்டால், 2,300 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது.
சாகுபடி பரப்பு குறைந்து, அறுவடை துவங்கி, வரத்து குறைவாக உள்ள நிலையிலும், விலையும் உயராததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: மழை குறைந்ததால் வறட்சி காரணமாக மக்காச்சோளம் சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது. இருக்கும் கிணற்று நீரில் சாகுபடி செய்தும், தற்போது விலை குறைவாக உள்ளது.
விதைப்பு முதல் அறுவடை வரை, ஏக்கருக்கு, 35 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
தற்போது, ஏக்கருக்கு, 20 முதல், 25 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைக்கும் நிலையில், விலை உயராதது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கறிக்கோழி நிறுவனங்கள் கொள்முதல் அளவை குறைத்துள்ளது.
இந்நிலையில், மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்கும் வகையில், தீவன உற்பத்தி நிறுவனங்களுக்கு விலை நிர்ணயம் செய்து, ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக விற்பனை செய்யவோ, அரசு நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.