ADDED : ஜூன் 26, 2025 12:13 AM

பல்லடம்,; பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 300 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளி செல்லும் சாலையில், குடியிருப்பை ஒட்டி கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. கொசு புழுக்களும் உற்பத்தியாகி வருகின்றன.இங்குள்ள சாக்கடை கால்வாய் அடைத்துள்ளதால், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல், தேங்கி நிற்பதுடன், ரோட்டிலும் வழிந்தோடி வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.