/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேரோடும் வீதிகளில் மின் வடம் திட்டம் 'புதை'ந்தது! ஒருங்கிணைப்பு இல்லாத அரசுத்துறைகள்தேரோடும் வீதிகளில் மின் வடம் திட்டம் 'புதை'ந்தது! ஒருங்கிணைப்பு இல்லாத அரசுத்துறைகள்
தேரோடும் வீதிகளில் மின் வடம் திட்டம் 'புதை'ந்தது! ஒருங்கிணைப்பு இல்லாத அரசுத்துறைகள்
தேரோடும் வீதிகளில் மின் வடம் திட்டம் 'புதை'ந்தது! ஒருங்கிணைப்பு இல்லாத அரசுத்துறைகள்
தேரோடும் வீதிகளில் மின் வடம் திட்டம் 'புதை'ந்தது! ஒருங்கிணைப்பு இல்லாத அரசுத்துறைகள்

'ஸ்மார்ட்' ரோடு பணிநின்றது புதைவடம் பணி
அதன்பின், மாநகராட்சியின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி துவங்கியது. இதேபோல், ஈஸ்வரன் கோவில் வீதியிலும், இருபுறமும் பெரிய சாக்கடை கால்வாய் அமைத்து, தார் ரோடு புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, 'ஸ்மார்ட் சிட்டி' பணி துவங்கிய போது, மின் புதைவடம் பதித்துள்ளது குறித்து கண்டுகொள்ளவில்லை.
மின் கட்டுப்பாட்டுபெட்டிகள் சேதம்
'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணியின் போது, மின் வாரியம் மின் கம்பம் அருகே வைத்திருந்த மின் கட்டுப்பாட்டு பெட்டிகள் சேதமாகின. சில இடங்களில், மண்ணில் இருந்து வெளியே இருந்த புதைவடம் குறித்தும் அதிகாரிகள் கவலைப்படவில்லை. அப்படியே, கான்கிரீட் தளம் அமைத்து, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணி புயல் வேகத்தில் முடிக்கப்பட்டது. இருப்பினும், அதுவரை அமைத்திருந்த புதைவடம் பணி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, அப்படியே வீணாகக்கிடக்கிறது.
3 ஆண்டாக கிடப்பில்போட்டது ஏனோ?
ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய ஜவுளிக்கடை வீதி ஆகியன அகலம் குறைவானவை. தேர்த்திருவிழாவின் போது, தேர்கள் அவ்வழியாக வலம் வர, மின்கம்பிகள் இடையூறாக உள்ளன. அதற்காக, முன்னுரிமை அடிப்படையில், திருப்பூரில் புதைவடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், மாநகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், மின்வாரியத்தின் புதைவடம் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மாலையில் தேரோட்டம் மின்சாரம் துண்டிப்பு
தேரோட்டம் பகல் நேரத்தில் நடந்த போது பிரச்னை இல்லை. ஆனால், இந்தாண்டு கோவில் தேரோட்டம், மாலை, 6:15 மணிக்கு மேல் துவங்கியது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால், தேரோட்டம் நடந்த போது, பெரும்பாலான கடைகள், வீடுகள் இருள்சூழ்ந்து காணப்பட்டது. தேரோட்டம் ஒரு வீதியில் முடிந்த பின், மின்வாரிய ஊழியர்கள், தற்காலிகமாக துண்டித்த கம்பிகளை மீண்டும் இணைத்து, மின் வினியோகம் செய்ய ஆயத்தமாகினர். இருப்பினும், நேற்று முன்தினம், மூன்று நேரம் வரை, மின்விளக்கு எரியாமல் இருள்சூழ்ந்திருந்தது, மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.