/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பல்லடத்தில் முடிவுக்கு வராத ஆட்டோ ஸ்டாண்டு பிரச்னை பல்லடத்தில் முடிவுக்கு வராத ஆட்டோ ஸ்டாண்டு பிரச்னை
பல்லடத்தில் முடிவுக்கு வராத ஆட்டோ ஸ்டாண்டு பிரச்னை
பல்லடத்தில் முடிவுக்கு வராத ஆட்டோ ஸ்டாண்டு பிரச்னை
பல்லடத்தில் முடிவுக்கு வராத ஆட்டோ ஸ்டாண்டு பிரச்னை
ADDED : ஜூலை 03, 2025 12:12 AM
பல்லடம்; பல்லடம் நகர, ஒன்றிய பகுதிகளில் ஏறத்தாழ, 300 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப்புகள், மார்க்கெட், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில், ஸ்டாண்டு அமைத்து ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
புதிதாக ஆட்டோக்கள் இயக்க வருபவர்களுக்கும், ஏற்கனவே ஆட்டோ இயக்கி வருபவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
ஆட்டோக்கள் வாங்கி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டாண்டில் நிறுத்த இடம் இல்லாமல், ஒவ்வொரு ஸ்டாண்டுகளிலும் பிரச்னை வருகிறது.
இவ்வாறு, பல்லடம் வட்டாரம் முழுவதும் உள்ள பல்வேறு ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், பல நாட்களாக பிரச்னைகள் நீடித்து வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிப்பதும், கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனுக்கள் அளிப்பதும் தொடர்கதையாக உள்ளது.
பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பகை உணர்வு ஏற்பட்டு வருகிறது.
பொது இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது நீண்ட காலமாகவே முறைப்படுத்தப்படாமல் உள்ளது.
ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் முகவரி, சொந்த ஆட்டோவா? வாடகைக்கு ஓட்டுகின்றனரா என்பது உள்ளிட்ட விவரங்கள் யாரிடமும் கிடையாது.
எனவே, பல்லடத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாள் முன்பு கூட, ஆட்டோ டிரைவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதும்.
மேலும் மோதல் பிரச்னைகள் ஏற்படும் முன், இதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.