Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நல்லுார் ஈஸ்வரன் கோவிலில்  முதன்முறையாக தேர்த்திருவிழா

நல்லுார் ஈஸ்வரன் கோவிலில்  முதன்முறையாக தேர்த்திருவிழா

நல்லுார் ஈஸ்வரன் கோவிலில்  முதன்முறையாக தேர்த்திருவிழா

நல்லுார் ஈஸ்வரன் கோவிலில்  முதன்முறையாக தேர்த்திருவிழா

ADDED : ஜூன் 24, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, முதல் தேர்த்திருவிழா, வரும் ஜூலை 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருப்பூர் மாநகராட்சி, நல்லுார் பகுதியில் உள்ள, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. கோவில் அறங்காவலர் குழுவினர், தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்து, பக்தர்கள் பங்களிப்புடன், புதிய தேர்கள் வடிவமைத்துள்ளனர்; புதிய தேர் வெள்ளோட்டம், ஏப்., மாதம் சிறப்புடன் நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாதம் தேர்த்திருவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதன்முறையாக தேர்த்திருவிழா வரும் ஜூலை 4ம் தேதி துவங்குகிறது.

வரும், 3ல், கணபதிேஹாமம் மற்றும் கிராமசாந்தி பூஜை, 4ம் தேதி கொடியேற்றம் மற்றும் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கும். தினமும் காலை, 10:00 மணிக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும், மாலையில், சுவாமி திருவீதியுலாவும் நடக்கும். அதன்படி, 5ம் தேதி சூரியபிரபை வாகன காட்சி; 6ம் தேதி ராவணேஸ்வர வாகனம், 7ம் தேதி அதிகார நந்தி வாகன காட்சி, 8ம் தேதி காமதேனு வாகன காட்சி மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

ஜூலை 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளையானை வாகன காட்சியை தொடர்ந்து, 10 ம் தேதி காலை, விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன், ரதம் ஏறும் நிகழ்ச்சியும், மாலையில், தேர் வடம் பிடித்து தேரோட்டமும் நடைபெறும்.

அதனை தொடர்ந்து, 11ல் பரிவேட்டை, 12 ம் தேதி தெப்போற்சவம், 13ம் தேதி நடராஜர் தரிசன காட்சி, 14ம் ேததி மஞ்சள் நீர் விழா, 15ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us