/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சுத்தமான மூலப்பொருட்களில் பழச்சாறு அறிவுறுத்தும் உணவுப்பாதுகாப்பு துறைசுத்தமான மூலப்பொருட்களில் பழச்சாறு அறிவுறுத்தும் உணவுப்பாதுகாப்பு துறை
சுத்தமான மூலப்பொருட்களில் பழச்சாறு அறிவுறுத்தும் உணவுப்பாதுகாப்பு துறை
சுத்தமான மூலப்பொருட்களில் பழச்சாறு அறிவுறுத்தும் உணவுப்பாதுகாப்பு துறை
சுத்தமான மூலப்பொருட்களில் பழச்சாறு அறிவுறுத்தும் உணவுப்பாதுகாப்பு துறை
ADDED : பிப் 06, 2024 01:34 AM
உடுமலை;பாழச்சாறுகளை, கலப்படமில்லாத சுத்தமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது.
அதேநேரம், ஒரு சிலர், உணவு பாதுகாப்பு சட்டப்படி, உரிமம் மற்றும் பதிவு சான்று பெறாமல் தற்காலிக கடை அமைத்து வருகின்றனர். கடையில் சுகாதாரம் பேணப்படாமல், துருப்பிடித்த பாத்திரங்களில் கூழ், மோர், பால், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை இருப்பும் வைக்கின்றனர்.
இவ்வாறு, தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதால், நுகர்வோருக்கு நோய் பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே, குளிர்பானங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோர், கலப்பிடமில்லாத மூலப்பொருட்களைக் கொண்டு, சுகாதாரமான முறையை கையாள வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறையினர் கூறியதாவது: பழரசம், குளிர்பானம், மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க நீளமான கரண்டியை உபயோகப்படுத்த வேண்டும்.
அதேபோல், கூழ், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாற்றினை, கண்ணாடி மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கப்களில் மட்டுமே பருக வேண்டும்.
இதன் வாயிலாக, தரமற்ற குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளின் வாயிலாக பரவக்கூடிய நோய்த்தொற்று கிருமிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். தரமற்ற பழச்சாறு விற்பனை கண்டறியப்பட்டால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.