/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை!அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை!
அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை!
அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை!
அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை!

தேவைப்படும் திறன்கள்
ஒழுக்கம் அல்லது கட்டுப்பாடு, படைப்புத்திறன், நடன நுட்பங்கள், தலைமைத்துவ பண்புகள், பொறுமை உடல் கட்டுமானத் தகுதி, பலவிதமான எண்ணங்கள் மற்றும் கற்பனைகளைக் கொண்டிருத்தல்.
எங்கே படிக்கலாம்?
இந்தியாவில் இதுதொடர்பாக பல அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தாலும், சில அரசு கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் இங்கே தரப்படுகின்றன. அவை, மைசூர் பல்கலை, பெங்களூரு நாடக் இன்ஸ்டிடியூட் ஆப் கதக் அன்ட் கோரியோகிராபி, டில்லி சங்கீத் நாடக் அகடமி , ஒடிசா நடனம் மற்றும் அரசுக் இசைக் கல்லுாரி.
பணித் தன்மை
தனி கலைஞர்களுக்கான அங்க அசைவுகளை உருவாக்குதல் மற்றும் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், கதை வடிவிலான இசை, நடன நிகழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்.
சம்பளம்
இந்திய நிலவரப்படி, ஒரு கோரியோகிராபரின் சம்பளம், ஆண்டிற்கு 5 முதல் 6 லட்சம் ரூபாயிலிருந்து, 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை வேறுபடுகிறது. புரடக் ஷன், கோரியோகிராபியின் கால அளவு, மீடியா நிறுவனம், டான்சர்களின் எண்ணிக்கை, பப்ளிகேஷன், தொழில்துறை செலவினங்கள், நிறுவனத்தின் பெயர் மற்றும் தரநிலைகள் உள்ளிட்ட பல அம்சங்கள், ஒரு கோரியோகிராபரின் சம்பளத்தை நிர்ணயிக்கின்றன.ஒரு கோரியோகிராபரின் கடின உழைப்பு மற்றும் இதர அம்சங்கள் ஆகியவைதான், அவரின் சம்பளத்தை தீர்மானிக்கின்றன. தங்களுக்கான யூனியனில் உறுப்பினராக இருக்கும் ஒரு கோரியோகிராபர், ஓய்வு நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெறுகிறார். ஆனால், அவ்வாறு உறுப்பினராக இல்லாத ஒருவர், தனக்கான பின் தேவைகளை, தான்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்.
வாய்ப்புகள்
தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற எதிர்கால தொழில்துறை எது என்று முடிவுசெய்யும் பெற்றோர்களில் பெரும்பாலானோருக்கு, கோரியோகிராபி என்பது விருப்பமான ஒன்றாக இருப்பதில்லை. ஆனால், நல்ல படைப்புத்திறன், நடனத்தில் அபார ஆர்வம், கலை மற்றும் சினிமாத்துறையில் ஈர்ப்பு உடைய மாணவர்களில், இத்துறை வேண்டாம் என்ற எதிர்ப்புகளை உடைத்தெறிந்து வெளிவரும் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே, கோரியோகிராபி துறையில் நுழைகிறார்கள். நல்ல கிரியேட்டிவிட்டி உள்ள மாணவர்களுக்கு, கோரியோகிராபி என்பது அபரிமிதமான சம்பளத்தையும், வாய்ப்புகளையும் வழங்கும் துறையாகும்.