ADDED : ஜன 12, 2024 11:17 PM
உடுமலை;உடுமலையில், தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலை வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்த அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.