/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'இலக்கு நோக்கி பாய மொபைல்போன், டிவி இடையூறு''இலக்கு நோக்கி பாய மொபைல்போன், டிவி இடையூறு'
'இலக்கு நோக்கி பாய மொபைல்போன், டிவி இடையூறு'
'இலக்கு நோக்கி பாய மொபைல்போன், டிவி இடையூறு'
'இலக்கு நோக்கி பாய மொபைல்போன், டிவி இடையூறு'
ADDED : பிப் 06, 2024 01:23 AM

திருப்பூர்;'இன்றைய தலைமுறையினர் இலக்கு நோக்கிச் செல்வதற்கு மொபைல்போன், 'டிவி' போன்றவை இடையூறாக இருக்கிறது' என்பதை, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாணவிகளிடம் சுட்டிக்காட்டினார்.
திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில், விளையாட்டு விழா, போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் எழிலி தலைமை வகித்தார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) உஷா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார்அபிநபு பேசியதாவது:
மகாபாரதத்தில் துரோணர் ஒரு சிறந்த ஆசிரியர். பாண்டவர்கள், கவுரவர்களுக்கு பல கலைகளை கற்றுத்தந்தவர். ஒருநாள், மரத்தில் ஒரு இலக்கு நிர்ணயித்து, அம்பு எய்தும்படி உடனிருந்தவர்களை தயார்படுத்தினர். சிலர் கவனச்சிதறலில் இலக்கை சரிவர கவனிக்காமல் தவறு செய்தனர்
ஆனால், அர்ஜூனனோ, சரியான இலக்கை நோக்கி அம்பெய்தி பாராட்டு பெற்றான். அர்ஜூனன் போல் தான் உங்களது இலக்கும் இருக்க வேண்டும். இலக்கை, தவிர பக்கத்தில் இருப்பவற்றை கவனித்தால், நம் பாதையும் மாறும்.
இலக்குக்கு இடையூறாக இன்று மொபைல்போன், 'டிவி' இருக்கும். நீங்கள் வெற்றி பெற வேண்டும், முன்னேற வேண்டுமெனில், ஒவ்வொரு நாளும் உங்களை நீங்களே பக்குவப் படுத்தி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் எவ்வளவு தகுதியானவர் என்பதை பொறுத்தே, நமது வெற்றி அமைகிறது.
கல்வி, விளையாட்டு, ஒரு பணி எதுவாக இருந்தாலும், வெற்றியை அடைய பற்று, ஈடுபாடு முக்கியம். அயராத முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால், இலக்கை அடைந்திட முடியும்; தோல்வி நேரிடாது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துவங்கி, 'நீட்' வரை அனைத்திலும் பெண்கள் முதலிடத்தில் வந்து கொண்டிருக்கிறீர்கள். படிப்பை தாண்டியும், வாழ்வில் பல விஷயங்கள் உள்ளது. பயம் கூடாது; எதையும் எதிர்க்கும் துணிச்சல் வேண்டும்.
எப்போதும், எங்கும் என்னால் முடியாது; சாதிக்க முடியாது. தலைமை ஏற்க முடியாது என தயங்க கூடாது. வாழ்வில் பிறருக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். பிறர் பாராட்டும் வகையிலான, செயல்களை வாழ பழக வேண்டும். இவ்வாறு கமிஷனர் பேசினார்.
அர்ஜூனனோ, சரியான இலக்கை நோக்கி அம்பெய்தி பாராட்டு பெற்றான். அர்ஜூனன் போல் தான் உங்கள் இலக்கும் இருக்க வேண்டும். இலக்கை தவிர பக்கத்தில் இருப்பவற்றை கவனித்தால், நம் பாதையும் மாறும்.