ஆன்மிகம்
தெப்போற்சவம்
ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். பரிவேட்டை, தெப்ப உற்சவம் - மாலை, 5:00 மணி.
கும்பாபிேஷகம்
ஸ்ரீ பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. நான்காம் கால யாக பூஜை - காலை, 9:00 மணி. அவிநாசிலிங்க பெருமானுக்கு எண்வகை மருந்து சாற்றுதல் - காலை, 10:00 மணி. 108 மூலிகை பொருட்கள் வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் - மதியம், 12:00 மணி. ஐந்தாம் கால யாக பூஜை, நிறையாகுதி, பேரொளி ஆராதனை - மாலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை.
பொங்கல் விழா
48ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம்நகர், 3வது வீதி, திருப்பூர். திருக்கல்யாண உற்சவம் - காலை, 8:30 மணி. பொங்கல் வைத்தல் - 10:00 மணி. பொங்கல் சிறப்பு பூஜை - மதியம், 12:00 மணி. மாவிளக்கு பூஜை - மாலை, 5:00 மணி.
மண்டலாபிேஷக பூஜை
ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி முதல்.
பொது
குறைகேட்பு கூட்டம்
மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 240 கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி.
புத்தக கண்காட்சி
வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். கண்காட்சி - காலை, 9:00 முதல் இரவு, 10:00 மணி வரை. 'பெண்மொழி யென்னும் புது சூரியன்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், சொற்பொழிவாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, 'திருப்பூரும் காந்தியும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம், பேச்சாளர், அனிதா கிருஷ்ணமூர்த்தி - மாலை, 6:00 மணி.