/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சதுரங்கத்தில் வெற்றி; மாணவருக்கு பாராட்டு சதுரங்கத்தில் வெற்றி; மாணவருக்கு பாராட்டு
சதுரங்கத்தில் வெற்றி; மாணவருக்கு பாராட்டு
சதுரங்கத்தில் வெற்றி; மாணவருக்கு பாராட்டு
சதுரங்கத்தில் வெற்றி; மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜன 04, 2024 12:33 AM

திருப்பூர் : பள்ளி கல்வித்துறை, ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், 67 வது தேசிய சதுரங்க போட்டி, வேலுார், ஸ்ரீ புரம், ஸ்ரீ நாராயண மஹாலில், டிச., 26 முதல், 30 வரை நான்கு நாட்கள் நடந்தது.
இதில், 17 வயது பிரிவு மாணவருக்கான தேசிய சதுரங்க போட்டியில், திருப்பூர் மாவட்டம் சார்பில், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 மாணவர், கோகுலகிருஷ்ணா, தமிழக அணிக்குழுவில் இணைந்து, போட்டியில் பங்கேற்றார்.
தமிழக குழு போட்டியில் ஐந்து வெற்றி, ஒரு சமன் செய்து, தமிழக அணி தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். தமிழக அணியில் இடம் பெற்று, திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த மாணவரை, திருப்பூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் செல்வராஜ், செயலாளர் சிவன், பொருளாளர், ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.