/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்
ADDED : ஜூன் 22, 2025 06:52 AM
திருப்பூர் : கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
வறுமைக்கோட்டுக்கு கீழ்வசிக்கும் பெண்கள், ஈர மாவு அல்லது உலர்ந்த மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க, 50 சதவீத மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான இயந்திரங்களை வாங்க, 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.குறிப்பாக, விதவைகள், ஆதரவற்றவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயன்பெற விரும்புவோர், வரும் 23ம் தேதி முதல், ஜூலை 14 வரை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.