/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குழந்தை தொழிலாளர் ஒழிப்பு; மாணவர்கள் உறுதிமொழி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு; மாணவர்கள் உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு; மாணவர்கள் உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு; மாணவர்கள் உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு; மாணவர்கள் உறுதிமொழி
ADDED : ஜூன் 15, 2025 09:59 PM

உடுமலை; உடுமலையில் பள்ளி மாணவியர், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.
உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி சிறப்பு பேரணி நடந்தது.
மாணவியர் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என கோஷமிட்டு பேரணி சென்றனர்.
தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற வேண்டுமென உறுதிமொழி எடுத்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் செண்பகவல்லி தலைமை வகித்தார். பேரணியில் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். ஆசிரிரியர் கண்ணபிரான் மாணவர்களை ஒருங்கிணைத்தார். தலைமையாசிரியர் தாரணி முன்னிலை வகித்தார்.
நெகமம், அரசு மேல்நிலைப் பள்ளியில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கனகராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதே போன்று, மெட்டுவாவி அரசு பள்ளியிலும், மாணவர்களிடையே குழந்தை தொழில் குறித்த விழிப்புணர்வு, பாதிப்புகள், கல்வி கற்பதன் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது.