ADDED : அக் 16, 2025 11:27 PM

காரணம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, பனை விதைகள் நடும் நிகழ்ச்சி சங்கோதிபாளையத்தில் நடந்தது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், பனை விதைகள் நடுவதற்கு இது உகந்த காலகட்டமாகும். முன்னதாக, மகிழ்வனம் தாவரவியல் பூங்காவை பார்வையிட்ட மாணவ, மாணவியர், தொடர்ந்து, அருகிலுள்ள நீரோடை கரையில், பனை விதைகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மகிழ்வனம் பூங்கா நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், 100 பனை விதைகள் நடவு செய்தனர்.


