Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலையில் திரளும் மாணவர்கள்... முறையாக நிறுத்தப்படாத பஸ்கள்

சாலையில் திரளும் மாணவர்கள்... முறையாக நிறுத்தப்படாத பஸ்கள்

சாலையில் திரளும் மாணவர்கள்... முறையாக நிறுத்தப்படாத பஸ்கள்

சாலையில் திரளும் மாணவர்கள்... முறையாக நிறுத்தப்படாத பஸ்கள்

ADDED : ஜூன் 06, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்,; ''பள்ளி மாணவ, மாணவியர் மாலை நேரங்களில் பஸ் ஏறி, இறங்கும் போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்; போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்'' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர், காங்கயம் ரோடு, சி.டி.சி., கார்னர் சந்திப்பில் பஸ் ஸ்டாப் உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் நிழற்குடை இருந்தும் ஸ்டாப் அருகே நிற்காமல், ஸ்டாப்புக்கு முன்பாக நின்று விடுகின்றனர். மாலை 4:00 முதல், 4:30 மணிக்குள் பழனியம்மாள் பள்ளி மாணவியர் வருகை அதிகரிக்கிறது; பாதி ரோடு அளவுக்கு மாணவியர் நிற்கின்றனர். பஸ் வந்தால் முண்டியடித்து ஏற முயற்சிக்கின்றனர்.

நடுரோட்டில் நிறுத்தம்

தெற்கு போலீசார் இருவர் பணியில் ஈடுபட்டு, பஸ்சில் இரு படிக்கட்டுகள் வழியாக அனுப்பி வைக்கின்றனர். ஒரு சில பஸ்கள் ஸ்டாப் அருகே ஓரத்தில் நிற்காமல், நடுரோட்டில் நிறுத்துவதால், மாணவியர் ஏறும் வரை, பின்னால் வரும் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பஸ்களை நிழற்குடை உள்ள இடத்தில் ஸ்டாப்பில், இடதுபுறம் ஓரமாக நிறுத்த அறிவுறுத்த வேண்டும். மாணவியர் வரிசையில் நின்று பஸ் ஏறும் வழக்கத்தை, பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரே நேரத்தில் பஸ் ஏற முயற்சி

ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், 300க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரள்கின்றனர். பஸ்கள் சீரான இடைவெளியில் வந்த போது, ஒரே நேரத்தில் அனைவரும் பஸ் ஏற முயல்வதால், சிரமங்கள் நிலவுகிறது.

கண்காணிக்காத போலீஸ்

ஸ்டாப்பில் பஸ் நிற்காததால், ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. இவ்விடத்தை போலீசார் கண்காணிப்பதில்லை. பஸ்கள் இங்கு ஒன்றும், அங்கு ஒன்றும் நிற்பதை காண முடிகிறது. ஒழுங்குப்படுத்த வேண்டியது அவசியம். மாணவ, மாணவியர் வரிசையில் நின்று பஸ் ஏற அறிவுரை வழங்க வேண்டும். தற்காலிகமாக தடுப்புகளை நிறுவி, கண்காணிக்க வேண்டும்.

---

2 படங்கள் 8 காலம்

காலையில் பள்ளிக்குச் செல்லவும், மாலையில் வீட்டுக்குத் திரும்பவும் பஸ்களை நம்பியுள்ள மாணவ, மாணவியர் படும் சிரமங்கள் ஏராளம். கால்கடுக்க காத்திருந்து பஸ்களில் ஏறுவதற்குள் 'அப்பப்பா...' என்று மூச்சு முட்டுகிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாப் பகுதியில், பஸ் ஏற மாணவ, மாணவியர் தவிக்க வேண்டியுள்ளது.

பஸ்சுக்காக காத்திருக்கும், திரளான மாணவ, மாணவியர்.

----

2 படங்கள்

திருப்பூர், காங்கயம் ரோடு, சி.டி.சி., கர்னர் ஸ்டாப்பில் நிற்காமல், ஸ்டாப்புக்கு முன்பாகவே நின்று மாணவ, மாணவியர் பஸ் ஏறுகின்றனர்.

காலியாகக் கிடக்கும் பஸ் ஸ்டாப்

படிக்கட்டு அருகே கதவு

தொங்கல் பயணம் தடுப்புசமீபத்தில் டவுன் பஸ்களில் படிக்கட்டு அருகே கதவுகள் அமைக்கப்பட்டன. ஸ்டாப்பில் பயணிகள் பஸ்சுக்கு ஏறிய பின், கதவை முழுமையாக மூடிய பின்பே பஸ் இயக்கப்படுகிறது. பஸ் படிக்கட்டில் தொங்கல் பயணம் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. நடத்துனர்கள் ' படிக்கட்டில் நிற்காதீங்க; ஏறி உள்ளே வாங்க' என அடிக்கடி சொல்வதை தவிர்த்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us