/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போதை மரணத்தின் பாதை மாணவர்கள் விழிப்புணர்வு போதை மரணத்தின் பாதை மாணவர்கள் விழிப்புணர்வு
போதை மரணத்தின் பாதை மாணவர்கள் விழிப்புணர்வு
போதை மரணத்தின் பாதை மாணவர்கள் விழிப்புணர்வு
போதை மரணத்தின் பாதை மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : மே 16, 2025 12:27 AM

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவ செயலர் மதுகார்த்திக் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். மாணவ பிரதிநிதி காமராஜ் பேசினார். பேராசிரியர் விநாயகமூர்த்தி மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
மாணவ செயலர்கள் செர்லின், லட்சுமிகாந்த், பிரவீன் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் 'போதை அது சாவின் பாதை' என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்து கொண்டனர். மாணவ பிரதிநிதி நவீன்குமார் நன்றி கூறினார்.