ADDED : ஜூன் 29, 2025 02:25 AM

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், காங்கேயம் சவுடாம்பிகா நகரைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் அக் ஷயன், 15, பிளஸ் 1 வகுப்பு பயின்று வந்தார்.
நேற்று மாலை 4:00 மணியளவில் வகுப்பு நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு வகுப்பறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.எதிர்பாராத விதமாக, அங்குள்ள வேப்பமரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்தது. கிளை விழுந்ததில், அக்ஷயன் அதே இடத்தில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.