/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேவதி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மும்முரம் ரேவதி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மும்முரம்
ரேவதி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மும்முரம்
ரேவதி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மும்முரம்
ரேவதி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மும்முரம்
ADDED : ஜூன் 14, 2025 11:22 PM
திருப்பூர்: திருப்பூர் ரேவதி துணை மருத்துவ படிப்பு கல்வி நிறுவனங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் துணை மருத்துவப் படிப்புகள் வழங்கும் வகையில் முதன் முதலாக துவங்கப்பட்டது ரேவதி கல்வி நிறுவனங்கள்.
நர்சிங் கல்லுாரி:ரேவதி நர்சிங் கல்லுாரியில், நான்காண்டு பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் 2 ஆண்டு எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புகள் உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம், டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலையின் அங்கீகாரம் பெற்றது. விடுதி வசதி, பஸ் வசதியும், ரேவதி மருத்துவமனையில் பயிற்சி வசதியும் உள்ளது.
ரேவதி அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரி: இங்கு பி.எஸ்.சி., பட்டப்படிப்பில், ஆப்பரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீஷியா டெக்னாலஜி, அவசர சிகிச்சை பிரிவு, டயாலசிஸ்; உணவியல், லேப், சுவாச சிகிச்சை உள்ளிட்ட 13 இளங்கலை படிப்புகளும், எம்.எஸ்சி., ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேசன் படிப்பும் உள்ளது.
ரேவதி பிசியோதெரபி கல்லுாரி: இதில், பி.பி.டி., நான்கரை ஆண்டு படிப்பு ஆறு மாத இன்டெர்ன்ஷிப் பயிற்சியுடன் அளிக்கப்படுகிறது.
ரேவதி ஆக்குபேசனல் தெரபி கல்லுாரி :ஆக்குபேசனல் தெரபியை கற்பிக்கும், பி.ஓ.டி., என்னும் நான்கரை ஆண்டு இளங்கலை படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.
ரேவதி கல்வி நிறுவனங்களின் கல்லுாரிகள், சிறந்த ஆசிரியர் குழு, துறை சார்ந்த வல்லுனர்களின் பயிற்றுவிப்பு உள்ளிட்ட சிறப்புகளுடன் உள்ளது.இக்கல்லுாரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.