/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாநில சிலம்பாட்டம் :திருப்பூர் மாணவர் அசத்தல்மாநில சிலம்பாட்டம் :திருப்பூர் மாணவர் அசத்தல்
மாநில சிலம்பாட்டம் :திருப்பூர் மாணவர் அசத்தல்
மாநில சிலம்பாட்டம் :திருப்பூர் மாணவர் அசத்தல்
மாநில சிலம்பாட்டம் :திருப்பூர் மாணவர் அசத்தல்
ADDED : ஜன 27, 2024 11:44 PM

திருப்பூர்:பள்ளிக்கல்வித்துறை சார்பில், குடியரசு, பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகள், ராணிப்பேட்டையில் சமீபத்தில் நடத்தப்பட்டது.
மாநிலம் முழுக்க இருந்தும் கம்புச்சண்டையில் கைதேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒத்தைக்கம்பு, இரட்டை கம்பு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 17 வயதுக்குட்பட்ட, 60 கிலோவுக்கு குறைந்த எடைப்பிரிவில், பல்லடம், இன்பான்ட் ஜீசஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷால், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து, திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட அணிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில், அணி மேலாளர்களாக சின்னசாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன், முத்தமிழ் சிலம்ப பயிற்சி மைய ஆசிரியர் கிருஷ்ணன் செயல்பட்டனர்.
பெண்களுக்கான போட்டியில் இரு மாணவிகள், மூன்றாமிடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பலரும் பாராட்டினர்.