/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்ரீசக்தி வேளாண் திருவிழா ;கோவையில் நாளை துவக்கம்ஸ்ரீசக்தி வேளாண் திருவிழா ;கோவையில் நாளை துவக்கம்
ஸ்ரீசக்தி வேளாண் திருவிழா ;கோவையில் நாளை துவக்கம்
ஸ்ரீசக்தி வேளாண் திருவிழா ;கோவையில் நாளை துவக்கம்
ஸ்ரீசக்தி வேளாண் திருவிழா ;கோவையில் நாளை துவக்கம்
ADDED : ஜன 05, 2024 01:24 AM
திருப்பூர்;கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், கல்லுாரி வளாகத்தில் 'ஸ்ரீ சக்தி வேளாண் திருவிழா - 2024' நாளையும் (6ம் தேதி), நாளை மறுநாளும்(7ம் தேதி) நடக்கிறது.
நாளை நடைபெற உள்ள சிறந்த நாட்டு காளை, சண்டை ஆடு, சேவல், நாட்டு நாய் இனம், ரேக்ளா பந்தயம் ஆகியவற்றுக்கான போட்டிகளை கண்டுகளிப்பதோடு, பங்கேற்கவும் செய்யலாம். வெற்றி பெறுவோருக்கு, தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.
நாளை காங்கயம் கால்நடை கண்காட்சி, நாட்டு நாய் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ரேக்ளா பந்தயம் நடைபெற உள்ளது. இரு நாட்களிலும் வேளாண் பொருட்கள் கண்காட்சி; தமிழ் நாட்டுப்புற கலாசாரக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.