/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜூன் 12, 2025 06:39 AM

திருப்பூர், : திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில், 29ம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா மற்றும் மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.
நேற்று முன்தினம் பால்குடம் தீர்த்த ஊர்வலம், அம்மன் அழைப்பு நடந்தது. நேற்று, அம்மனுக்கு திருக்கல்யாணம், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், பூவோடு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கம்பம் எடுத்து, கங்கையில் விடப்பட்டது. இன்று மஞ்சள் நீர் விளையாட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.