/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விளையாட்டு போட்டி அட்டவணை; பள்ளி கல்வித்துறை வெளியிட்டது விளையாட்டு போட்டி அட்டவணை; பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
விளையாட்டு போட்டி அட்டவணை; பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
விளையாட்டு போட்டி அட்டவணை; பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
விளையாட்டு போட்டி அட்டவணை; பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
ADDED : ஜூன் 15, 2025 11:36 PM
திருப்பூர்; நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பள்ளிகளின் செயல்பாடு குறித்த நாட்காட்டி காலண்டர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தற்போது உடற்கல்வி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனரிடம் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முதன்மை மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு இது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 25ல் குறுவட்ட அளவிலான போட்டிகளுக்கு குழு நிர்ணயக் கூட்டம் நடத்துதல்;ஜூன் 30ல் துவங்கி,ஜூலை 31க்குள் 14, 17 மற்றும் 19 வயது பிரிவினருக்கு தடகளம், குழு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி முடித்தல்; ஆக., 6ல் வருவாய் மாவட்ட அளவிலான போட்டியை துவங்குதல்; ஆக., 21, 22ல் மாநில அளவிலான விளையாட்டு போட்டியை நடத்துதல் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
''எஸ்.ஜி.எப்.ஐ., எனப்படும் இந்திய பள்ளி விளையாட்டு சம்மேளன, மண்டல விளையாட்டு போட்டியை ஆக., இறுதி வாரம் நடத்த வேண்டும்; டேக்வாண்டோ, சிலம்பம் உள்ளிட்டவை அடங்கிய புதிய விளையாட்டு போட்டிகளை செப்., 9க்குள் முடித்து, அக்., மாதம் பாரதியார், குடியரசு தின விளையாட்டு போட்டிகளை துவங்க வேண்டும்; நவ.,- டிச., மாதங்களில் மாநில குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்குவிக்கப்படும் செஸ்
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார். பிரக்ஞானந்தா உள்ளிட்ட வீரர்கள் பிரகாசித்து வருகின்றனர். துவக்கப்பள்ளி மாணவர்களையும் செஸ் போட்டிக்குள் கொண்டு வரும் முயற்சியை, மூன்று ஆண்டுகளாக கல்வித்துறை தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நடப்பாண்டும், 11 வயதுக்கு உட்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவருக்கு பள்ளி அளவில் செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.