/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடுஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 28, 2024 11:49 PM

திருப்பூர்:திருப்பூர், சாமிநாதபுரத்தில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவிலில், சுதர்சன ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த, அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அயோத்தி சென்று ஸ்ரீராமரை வழிபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும், கோவில்களில் சிறப்பு வழிபாடு, யாகங்கள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருப்பூர், காந்திநகர் சாமிநாதபுரம் மேற்கு பகுதியில் உள்ள ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருமஞ்சனம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், அர்ச்சனை, தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
கோவை எல்லையப்பர் கோவில் அர்ச்சகர் சசிகுமார், வழிபாடுகளை மேற்கொண்டார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பட்டாபிஷேக ராமரை வழிபட்டனர்.