Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளி மாணவர்களுக்கு கோடை சிறப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு கோடை சிறப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு கோடை சிறப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு கோடை சிறப்பு முகாம்

ADDED : மே 24, 2025 06:30 AM


Google News
உடுமலை : உடுமலை பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நாளை (25ம்தேதி) கொழுமம் ரோடு பிரம்ம குமாரிகள் அமைப்பின் அமைதி இல்லத்தில் நடக்கிறது.

முகாம் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதில், பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

முகாமில் விளையாட்டு பயிற்சிகள், உடற்பயிற்சி, நினைவாற்றல் விளையாட்டுகள், பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள், நற்பண்புகளை வளர்க்கும் செயல்முறைகள், திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், தியானம் உள்ளிட்ட செயல்பாடுகள் நடக்கிறது.

முன்பதிவு செய்வதற்கும், கூடுதல் தகவல் பெறுவதற்கும், 99426 55108, 94420 09787 எண்களை தொடர்பு கொள்ளலாம் என, பிரம்ம குமாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us