/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : செப் 23, 2025 05:57 AM
அவிநாசி; திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் கோவில் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
இதனை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் துவக்கிவைத்தார். அறநிலையத்துறையின் திருப்பூர் மண்டல கோவில் செயல் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. செயல் அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) ஹர்சினி, உதவி ஆணையர் தமிழ்வாணன், திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார்,கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.