/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாவட்டத்தில் 8 இடத்தில் சிறப்பு நுாலகம் திறப்பு மாவட்டத்தில் 8 இடத்தில் சிறப்பு நுாலகம் திறப்பு
மாவட்டத்தில் 8 இடத்தில் சிறப்பு நுாலகம் திறப்பு
மாவட்டத்தில் 8 இடத்தில் சிறப்பு நுாலகம் திறப்பு
மாவட்டத்தில் 8 இடத்தில் சிறப்பு நுாலகம் திறப்பு
ADDED : ஜூன் 11, 2025 06:37 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் நுாலக கட்டடம் மற்றும் சிறப்பு நுாலகங்களை காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, கூடுதல் நுாலக கட்டடங்கள், சிறப்பு நுாலகங்கள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தளி, தாராபுரம், சங்கராண்டாம்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி ஆகிய ஆறு இடங்களில் கூடுதல் நுாலக கட்டடம் திறக்கப்பட்டது. தாராபுரத்தில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, நுாலக துறை அலுவலர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சிறப்பு நுாலக திறப்பு விழாவில், மேயர் தினேஷ்குமார், கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, நுாலக துறை அலுவலர்கள் சாந்தி, சுரேஷ், தர்மராஜன், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழாவில், 'டீன்' பத்மினி, நுாலக துறை அலுவலர்கள் ஜெயராஜ், சுல்தான் மணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.