/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
இன்றும் நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : பிப் 24, 2024 01:23 AM
திருப்பூர்;'திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும், நாளையும், 52 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு, 22 பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், அரூர், திருவண்ணாமலைக்கு, 15 பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிக்கு, 15 பஸ்கள் என, 52 சிறப்பு பஸ் இன்றும், நாளையும் இயங்கும்.
இன்று மாசி மாத பவுர்ணமி என்பதால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சேலம் வழியாக திருவண்ணமாலை கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ் குறித்த விபரங்களை அந்தந்த பஸ் ஸ்டாண்டில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் அறிந்து கொள்ளலாம், என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.