/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தெற்கு குறுமைய போட்டி; உடற்கல்வி துறை ஆலோசனை தெற்கு குறுமைய போட்டி; உடற்கல்வி துறை ஆலோசனை
தெற்கு குறுமைய போட்டி; உடற்கல்வி துறை ஆலோசனை
தெற்கு குறுமைய போட்டி; உடற்கல்வி துறை ஆலோசனை
தெற்கு குறுமைய போட்டி; உடற்கல்வி துறை ஆலோசனை
ADDED : ஜூலை 02, 2025 11:53 PM
திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி தொடர்பான ஆலோசனைக்கூட்டம், எஸ்.பெரியபாளையம், அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அகோரம் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் தமிழ்வாணி முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
'ஆர்வமுள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியரையும் விளையாட்டு போட்டியில் பெற்றோர் ஒப்புதலுடன் பங்கேற்க செய்ய வேண்டும்; போட்டி நடக்கும் நாளில் காலதாமதம் இல்லாமல் மைதானத்துக்கு வர வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.
கண்காணிப்புக்குழு உறுப்பினர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் லதா மாதேஸ்வரி, முருகன், சண்முகநதி நியமனம் செய்யப்பட்டனர்.
நேற்று வடக்கு குறுமையத்திலும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று உடுமலை, பல்லடம். நாளை காங்கயம், தாராபுரம் குறுமையங்களில் தனிநபர், குழு விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.