Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

ADDED : ஜூலை 01, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
மாணவர்களுக்கு பேச்சு போட்டி

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி மாணவி மதுமிதா முதலிடம், வேலம்பாளையம் அரசு பள்ளி மாணவி ஸ்ரீதன்யா இரண்டாமிடம், உடுமலை ஆர்.கே.ஆர்., பள்ளி மாணவி ஹரீஸ்மிதா மூன்றாமிடம் பெற்றனர். சிறப்பு பரிசுக்கு கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவி சர்மிளா, கே.எஸ்.சி., பள்ளி மாணவர் சபரிமணிஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில் அவிநாசி அரசு கல்லுாரி தமிழரசன் முதலிடம், சிக்கண்ணா கல்லுாரி பாசிதா பானு இரண்டாமிடம், பூபதி மூன்றாமிடம் பெற்றனர்.

கொல்லம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

டிக்கெட் முன்பதிவு சுறுசுறுப்பாக துவங்கியுள்ளதால், ைஹதாரபாத் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07193) இயக்கம், ஜூலை, 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை தோறும் ைஹதாரபாத் - கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருப்பூருக்கு ஞாயிறு இரவு, 9:15 மணிக்கு வரும் ரயில், திங்கள் காலை 7:20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, திங்கள் காலை 10:45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 7:20 க்கு திருப்பூர் வந்து, மறுநாள் மாலை 5:30 க்கு ஹைதாரபாத் சென்றடைகிறது. வாராந்திர சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜூலை 28 வரை இந்த ரயிலின் இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகம் அமைப்பின் சார்பில், மாநகராட்சி கமிஷனர், மேயர் மற்றும் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'பி.என்., ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள பாதசாரிகள் பயன்படுத்தும் பாதைகளில் பலரும் கடைகள் வைத்தும், தள்ளு வண்டிகளை நிறுத்தியும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பஸ்கள் செல்லும் வழியில் பயணிகள் செல்லும் நிலை உள்ளது. எஸ்கலேட்டரும் பயன்பாட்டில் இல்லை. உட்புறத்திலும் சிலர் கடைகளை வெளியே வைத்து ஆக்கிரமித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இது குறித்து கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என கூறியுள்ளனர்.

ராகுல் பிறந்த நாள் விழா

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., சார்பில்,' இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவோம்' எனும் தலைப்பில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வ.உ.சி., நகரில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கோபால்சாமி வரவேற்றார். மண்டல பொது செயலார் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குருசாமி, மண்டல தலைவர் கோவிந்தசாமி, 6வது வார்டு தலைவர் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், மாவட்ட மேலிட பொறுப்பாளர் மொடக்குறிச்சி பழனிசாமி பேசினார். 18வது வார்டு தலைவர் பாலகுமார் நன்றி கூறினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., சார்பில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவோம்' எனும் தலைப்பில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வ.உ.சி., நகரில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கோபால்சாமி வரவேற்றார். மண்டல பொது செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குருசாமி, மண்டல தலைவர் கோவிந்தசாமி, 6வது வார்டு தலைவர் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், மாவட்ட மேலிட பொறுப்பாளர் மொடக்குறிச்சி பழனிசாமி பேசினார். 18வது வார்டு தலைவர் பாலகுமார் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us