Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

ADDED : மார் 25, 2025 11:58 PM


Google News

பள்ளிக்கு பர்னிச்சர் வழங்கல்


திருப்பூர், கே.எம்., குழுமங்களின் ஒரு அங்கமான ஜெயவிஷ்ணு கிளாத்திங் நிறுவனம், திருப்பூர் ரவுண்ட் டேபிள் எண்: 116 ஆகியன இணைந்து, பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர்களை நன்கொடையாக வழங்கின.

மகளிர் திட்ட பணிகள் ஆய்வு


மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமைவகித்தார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு பெறுதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், முதல்வரின் காலை உணவு திட்டம், இளைஞர்கள் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு, நகர்புற வாழ்வாதார திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் பணிகள் குறித்து, கலெக்டர் ஆய்வு செய்தார். மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார், உதவி திட்ட அலுவலர்கள் பாஸ்கரன், பாஸ்கர், சம்பத்குமார் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

மின் கம்பிகள் மாற்றலாமே!


பொங்கலுார் ஒன்றியம், சேமலை கவுண்டம்பாளையத்தில் இருந்து கொடுவாய் - நாச்சிபாளையம் ரோட்டை இணைக்கும் இணைப்பு ரோட்டின் ஓரத்தில் பழுதான மின்கம்பம் உள்ளது. அந்த கம்பத்துக்கு பதிலாக அருகிலேயே புதிய கம்பம் நடப்பட்டுள்ளது. மாதக்கணக்கில் ஆகியும் மின் கம்பியை புதிய கம்பத்திற்கு மாற்றவில்லை. காற்று மழைக்கு மின் கம்பம் சாய்ந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின் கம்பியை புதிய கம்பத்திற்கு மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

திருப்பூர், கே.எம்., குழுமங்களின் ஒரு அங்கமான ஜெயவிஷ்ணு கிளாத்திங் நிறுவனம், திருப்பூர் ரவுண்ட் டேபிள் எண்: 116 ஆகியன இணைந்து, பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு, 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர்களை நன்கொடையாக வழங்கின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us