/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வன எல்லையில் சோலார் மின்வேலி தேவை! குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்வன எல்லையில் சோலார் மின்வேலி தேவை! குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
வன எல்லையில் சோலார் மின்வேலி தேவை! குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
வன எல்லையில் சோலார் மின்வேலி தேவை! குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
வன எல்லையில் சோலார் மின்வேலி தேவை! குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 06, 2024 12:23 AM

உடுமலை;மலையடிவார விளைநிலங்களில், வனவிலங்குகள் வருவதை தடுக்க, சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என வனத்துறையின் குறை தீர் கூட்டத்தில், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
உடுமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில், வனத்துறை சார்பில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார்மீனா தலைமை வகித்தார்.
இதில், உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது.
திருமூர்த்திநகர், வலையபாளையம், தேவனுார்புதுார், அர்த்தநாரிபாளையம், ராவணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், வன எல்லையில், சோலார் மின்வேலி அமைத்து, யானைகள், விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க வேண்டும்.
ஏற்கனேவே அமைக்கப்பட்ட சோலார் மின்வேலிகளை புதுப்பிக்க வேண்டும். காட்டுப்பன்றிகளால், அனைத்து பகுதிகளிலும் அதிக சேதம் ஏற்படுகிறது.
இது குறித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பொன்னாலம்மன் கோவில் அருகே, வனத்துறை இடத்தில் தடுப்பணை கட்டினால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்; வனவிலங்குகளுக்கும் குடிநீர் தேவை பூர்த்தியடையும்.
காண்டூர் கால்வாய் 'சூப்பர் பாசேஜ்' வழியாக வனவிலங்குகள் வருவதை தடுக்க, தடுப்பு ஏற்படுத்த வேண்டும். குரங்குகளால், பல்வேறு சாகுபடிகளில், பிரச்னை ஏற்படுகிறது.
கூண்டு வைத்து பிடித்து, அவற்றை வனத்துக்குள் விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார்மீனா பேசுகையில், ''பொன்னாலம்மன் கோவில் அருகே தடுப்பணை கட்டுவது குறித்து, விரைவில் ஆய்வு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். சோலார் மின்வேலி அமைப்பதற்கான திட்டம் குறித்து, அரசுக்கு பரிந்துரைக்கப்படும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டம், படிப்படியாக செயல்படுத்தப்படும்,'' என்றார்.