/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூருக்கு சிறிய தொழிற்பூங்கா... குறு, சிறு நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்திருப்பூருக்கு சிறிய தொழிற்பூங்கா... குறு, சிறு நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்
திருப்பூருக்கு சிறிய தொழிற்பூங்கா... குறு, சிறு நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்
திருப்பூருக்கு சிறிய தொழிற்பூங்கா... குறு, சிறு நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்
திருப்பூருக்கு சிறிய தொழிற்பூங்கா... குறு, சிறு நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்
ADDED : ஜூன் 09, 2025 12:43 AM

திருப்பூர்; 'புதிய தொழிற்சாலைகளை உருவாக்க, தமிழக அரசின் சிறிய தொழிற்பூங்கா திட்டத்தில், திருப்பூருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியில் மட்டுமல்லாமல், உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியிலும் முன்னோடியாக திகழ்கிறது, திருப்பூர். பருத்தி நுாலிழையில் தயாரிக்கப்படும் பின்னல் துணியில் இருந்து, ஆடைகள் தயாரித்து, நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள சில்லரை வியாபாரிகள், திருப்பூரில் ஆடைகளை தைத்து பெறுகின்றனர். எனவே, ஏற்றுமதி நிறுவனங்கள், பெரியளவில் இயங்கும் உள்நாட்டு விற்பனைக்கான பனியன் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு பனியன் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 'புதிய தொழிற் பூங்கா திட்டம்' திருப்பூரின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக அவசியம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில், முதலிபாளையம், திருப்பூரில் உள்ள 'சிட்கோ' வளாகம், புதிய திருப்பூர் நேதாஜி தொழிற் பூங்கா ஆகியவை, சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆதிதிராவிட தொழில் முனைவோருக்காக உருவாக்கப்பட்ட, 'தாட்கோ' தொழிற்பேட்டை பயன்பாடின்றி பாழானது; ஒரு சில தொழில் முனைவோர் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்; தற்போது, அங்கு பெரியளவில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
'இதுவரை அமைந்த தொழிற்பூங்காக்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயனுள்ளதாக இருந்தது; குறு, சிறு நிறுவனங்களுக்கு இத்தகைய அரசு சலுகை திட்டங்கள் சென்றடையவில்லை' என்ற ஆதங்கம் தென்படுகிறது.