/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிறுதானிய உணவால் ஆயுட்காலம் உயரும்! சிறுதானிய உணவால் ஆயுட்காலம் உயரும்!
சிறுதானிய உணவால் ஆயுட்காலம் உயரும்!
சிறுதானிய உணவால் ஆயுட்காலம் உயரும்!
சிறுதானிய உணவால் ஆயுட்காலம் உயரும்!
ADDED : ஜூலை 08, 2024 08:37 PM

திருப்பூர்;'சிறுதானியம் குறித்து, அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவு பொருள் ஆரோக்கியமாக தரமான இருந்தால் தான் நாம் ஆயுட்காலம் உயரும்,' என, கருத்தரங்கில் கல்லுாரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி குமரன் அரங்கில், நாட்டு நலப்பணித் திட்ட அலகு - 2 சார்பில், சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியா பேசியதாவது:
தினமும் ஒருவேளை உணவாக சிறுதானியம் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து மட்டுமல்லாது, அதிக ஆரோக்கியமும் இதில் உள்ளது. உலகிலேயே அதிகளவில் சிறுதானியம் விளைவிப்பது நம் நாடு தான்.சிறுதானியம் சாப்பிடுவதால், தேவையற்ற நேரத்தில் பசி எடுப்பது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சரியாகும். சிறுதானியம் குறித்து, அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவு பொருள் ஆரோக்கியமாக தரமான இருந்தால் தான் நாம் ஆயுட்காலம் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆரோக்கியமான சிறுதானிய உணவு குறித்து, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பேராசிரியர் விநாயகமூர்த்தி பேசினார். மாணவச் செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, கவியரசு, கோகுல்ராம் ஆகியோர் பங்கேற்றனர். பேராசிரியர்கள் மணிமேகலை, கண்ணன், செந்தில்குமார், கலைவாணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
----
திருப்பூர் சிக்கண்ணாக கல்லுாரியில் நேற்று நடந்த சிறு தானிய விழிப்புணர்வு கருத்தரங்கில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியா பேசினார். பங்கேற்ற என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர்.