/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறன் மேம்பாட்டு போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு திறன் மேம்பாட்டு போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
திறன் மேம்பாட்டு போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
திறன் மேம்பாட்டு போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
திறன் மேம்பாட்டு போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 10, 2025 11:20 PM
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் புத்தக திருவிழாவையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான திறன் மேம்பாட்டு போட்டி வரும், 22ம் தேதி நடக்கிறது.
வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், ஆறாம் ஆண்டு வெள்ளகோவில் புத்தக திருவிழாவையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான திறன் மேம்பாட்டு போட்டி வெள்ளகோவில் ஆர்.பி.எஸ்., மஹாலில் வரும், 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
ஓவியப்போட்டி தலைப்பு, ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரை தேசியக்கொடி, 4 முதல் ஆறாம் வகுப்பு வரை தேசிய மலர், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேசிய பறவை, பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை தேசிய விலங்கு மற்றும் கல்லுாரிக்கு 'தேசிய தலைவர்கள்' தலைப்பில் நடக்கிறது.
பேச்சு போட்டி தலைப்பில், ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரை மகாத்மா காந்தி, 4 முதல் ஆறாம் வகுப்பு வரை இந்திய ராணுவம், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 'புத்தகம் என்னும் போதிமரம்', பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 'விலக்கு இலக்கு' மற்றும் கல்லுாரிக்கு, 'குன்றென நிமிர்ந்து நில்' தலைப்பில் நடக்கிறது.
போட்டியில் பங்கேற்பவர்களுக்கு, ஓவிய போட்டிக்கு வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். ஒரு மாணவர், ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி. வரும் 20ம் தேதிக்குள் பங்கேற்பவர்கள் அன்பு அங்காடியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, 91500 03002 தொடர்பு கொள்ளலாம் என, புத்தக திருவிழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.