ADDED : ஜன 27, 2024 11:40 PM
திருப்பூர்:காங்கயம், சிவன்மலை ஸ்ரீசுப்மண்யசுவாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழாவில், இரண்டாவது நாளான நேற்று மாலை, பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டது. தேர் மலையை சுற்றி வந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாளான இன்று தேர் நிலை அடைகிறது.
தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி கிராம மக்கள் விரதம் இருந்து குழுவாக சென்றும், காவடி எடுத்தும் வந்து என, பல வகைகளில் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களின் காளை மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு வருகின்றனர்.