/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஏழு கிராமங்கள் தேர்வு வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஏழு கிராமங்கள் தேர்வு
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஏழு கிராமங்கள் தேர்வு
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஏழு கிராமங்கள் தேர்வு
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஏழு கிராமங்கள் தேர்வு
ADDED : ஜூன் 26, 2025 09:38 PM
உடுமலை; உடுமலை வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஏழு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராம விவசாயிகள் மானிய திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
உடுமலை வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், நடப்பாண்டு தேவனுார் புதுார், மானுப்பட்டி, பெரியபாப்பனுாத்து, ராகல்பாவி, ராவணாபுரம், பெரிய கோட்டை, போடிபட்டி ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தனி நபர் தரிசு நிலங்களை, முட்புதர்களை அகற்றி, உழவு செய்து சாகுபடி மேற்கொள்ள, ஒரு ஹெக்டருக்கு மானியமாக, 9,600 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக, மானுப்பட்டி ஊராட்சி கோடந்துார் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், 45 ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட கிராம விவசாயிகள் உழவன் செயலி வாயிலாகவும், வேளாண் உதவி அலுவலர்களான, மானுப்பட்டி - அமல்ராஜ் -97512 93606 ; தேவனுார் புதுார், ராவணாபுரம் மார்க்கண்டன்- 98949 36328; பெரிய பாப்பனுாத்து- வைரமுத்து - 98659 39222; பெரிய கோட்டை, போடிபட்டி- நாகலட்சுமி - 93613 20227; ராகல்பாவி- பாலசுப்ரமணியம்- 98439 00274 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும், பயன்பெறலாம்.
இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.