ADDED : ஜன 11, 2024 07:03 AM
திருப்பூர் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தமிழக அரசு, 12 குழுக்களை அமைத்துள்ளது.
சபாநாயகர் அப்பாவு தலைமையிலான குழு சார்பில், அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கருத்தரங்கம், நாளை (12ம் தேதி) நடைபெற உள்ளது. காலை, 10:00 மணிக்கு, பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியிலும், மதியம், 12:00 மணிக்கு, திருப்பூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதில், 'சட்டசபை மூலம் சமூக முன்னேற்றத்துக்கு கருணாநிதி ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது' என்கிற தலைப்பில், கல்லுாரி மாணவர்கள் பேசுகின்றனர்.